Miss You – puthukavithai

Miss You – puthukavithai

 Author: மகிழம் பூ  Publisher: Magifm More Details
 Description:

1. நான் உன்னை வெறுக்கிறேன்

உன் நினைவுகள் இல்லாத

ஒரு நொடியைக்கூட

எனக்கு நீ விட்டுச் செல்லவில்லை.

ஒவ்வொரு மூச்சிலும்

உன்னை மட்டுமே சுவாசிக்கச் செய்து

என்னை எனக்கே அந்நியமாக்கிய

உன் அன்பை…

நான் ஆழமாய் வெறுக்கிறேன்!

2. கொஞ்சம் கூட ஸ்பெஷல் இல்லையா?

எல்லோரிடமும் நீ காட்டும்

அதே புன்னகைதான் எனக்கும் என்றால்,

நான் கடந்த வந்த

அத்தனை கண்ணீர் துளிகளுக்கும்

என்னதான் மதிப்பு?

உன் இதயத்தின் ஆகக்கடைசி அறையில்கூட

எனக்கென ஒரு குட்டி இடம் இல்லையா?

நான் உனக்கு…

கொஞ்சம் கூட ஸ்பெஷல் இல்லையா?

3. புரியாத புதிர்

என் மௌனத்தின் அர்த்தங்களை

அகராதி கொண்டு தேடுகிறாய்.

வார்த்தைகளை விட

என் கண்கள் பேசிய

காதல் மொழியை நீ

ஒருபோதும் புரிந்துகொள்ளவே இல்லை!

4. மௌன யுத்தம்

நீ என்னை பிரியும்

வலியைக் கூட தாங்கிக் கொண்டேன்.

ஆனால், உன்னால்

என்னை மறந்து வாழ முடிகிறது

என்ற உண்மையைத்தான்

என் மனதால்

தாங்கிக் கொள்ளவே முடியிவில்லை.

5. தேடலின் ஏமாற்றம்

கூட்டத்தில் ஒருத்தியாய்

என்னை நீ கடந்து போகும்போது

நெஞ்சம் படபடக்கிறது.

நீ திரும்பிப் பார்ப்பாய் என்ற

என் பேராசை,

ஒவ்வொரு முறையும்

அசிங்கப்பட்டுப் போகிறது

உன் அலட்சியத்தால்!

6. பழகிப்போன தனிமை

“மிஸ் யூ” என்று நான் அனுப்பும்

ஒற்றை வரியில்,

ஆயிரம் இரவுகளின் தூக்கமின்மை

ஒளிந்திருக்கிறது.

உனக்கோ அது,

வெறும் ஒரு குறுஞ்செய்தி… அவ்வளவே!

7. நீ கொடுத்த வலி

உன்னை வெறுக்க வேண்டும் என்றுதான்

ஒவ்வொரு காலையிலும்

சபதம் எடுக்கிறேன்.

ஆனால், அந்தச் சபதம்

உன் ஒற்றை புன்னகையில்

மண்ணோடு மண்ணாய்

 போகிறது…

8. கண்ணாடி இதயம்

உனக்காக உருகிய என் இதயத்தை

ஒரு விளையாட்டுப் பொருளாய்

கையாண்டுவிட்டுப் போய்விட்டாய்.

உடைந்த பின்னும்

உன் பிம்பத்தையே காட்டும்

இந்தக் கண்ணாடி மனதை

என்ன செய்வது என்று தெரியவில்லை.

9. விடை தெரியா கேள்வி

நமக்குள் அத்தனை நெருக்கமிருந்தும்,

இன்று ஏதும் அறியாத

அந்நியர்களைப் போல

கடந்து போகிறோம்.

உன் உலகத்தில் எனக்கான

பக்கம் எப்போது கிழித்தெறியப்பட்டது?

10. ஏமாற்றத்தின் நிறம்

நீ என்னை புரிந்துகொள்வாய் என்று

காத்திருந்த காலங்கள் யாவும்

கானல் நீராய் போயின.

இனி உனக்காக அழப் போவதில்லை,

ஏனெனில்…

என் கண்ணீரின் மதிப்பு கூட

உன் சுயநலத்திற்குத் தெரியாது!

 Back
error: Content is protected !!