நந்தினி அழுதபடி பள்ளி வளாகத்திற்குள் சென்றுவிட்டாள். மாயவன், தாராவை ஒரு கூர்மையான பார்வையால் அளந்தான்.
“தாரா, இந்த போட்டோ உனக்கு எப்படி கிடைச்சது?” மாயவன் மெதுவாகக் கேட்டான்.
“யாரோ எனக்கு அனுப்பினாங்க மாயவா. நான் உன்னோட வெல்விஷர், அதான் உன்கிட்ட உண்மையைச் சொல்ல வந்தேன். இவளை மாதிரி பொண்ணுங்ககிட்ட நீ ஏமாந்துடக் கூடாது,” என்றாள் தாரா, அவன் கையைப் பற்றிக்கொண்டு மாயவன் அவள் கையை மெதுவாக விலக்கினான். “உண்மை எதுன்னு எனக்குத் தெரியும் தாரா. நீ கிளம்பு, நான் நந்தினிகூட பேசணும்.” என்றான்.
தாரா அதிர்ந்தாள். “என்னது? போட்டோவைப் பார்த்தும் அவகூடப் பேசணுமா? உனக்கு என்ன ஆச்சு?”
“எனக்கு என்ன ஆச்சுன்னு அப்புறம் சொல்றேன். முதல்ல நீ இங்கிருந்து போ!” மாயவனின் குரலில் இருந்த அதிகாரம் தாராவை மிரட்டியது. அவள் எரிச்சலுடன் காரில் ஏறிப் பறந்தாள்.
(மாயவனின் மைண்ட் வாய்ஸ்: ‘இந்தத் தாரா எவ்வளவு சீப்பா யோசிக்கிறா? நந்தினி முகத்தைப் பார்த்தாலே அவ எவ்வளவு உண்மையானவன்னு தெரியுது. இந்த மார்பிங் வேலையைத் தாராதான் பண்ணியிருக்கணும்.!’)
மாயவன், நந்தினியைத் தேடிச் சென்றான். அவள் ஒரு மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“நந்தினி… நந்தினி இங்க பாருங்க,” மாயவன் அவளருகில் அமர்ந்தான்.
“ப்ளீஸ் போயிருங்க… என்னை ஏன் எல்லாரும் இப்படி அசிங்கப்படுத்துறாங்க? நான் என்ன பாவம் பண்ணேன்? அந்தப் பொண்ணு சொல்றது எதுவும் உண்மையில்லை,” நந்தினி விக்கினாள்.
“எனக்குத் தெரியும் நந்தினி. அந்த போட்டோ பொய்யானதுன்னு எனக்குத் நல்ல தெரியும். ஏன்னா, நான் ஒரு டெக்னாலஜி கம்பெனி வச்சிருக்கேன். எது மார்பிங், எது உண்மைன்னு எனக்குப் புரியும். நீங்க அழாதீங்க.” என்றான்.
நந்தினி நிமிர்ந்து பார்த்தாள். “நிஜமாவா சொல்றீங்க? நீங்க என்னை நம்புறீங்களா?”
“உங்க கண்ணுல இருக்கிற நேர்மையை நான் நம்புறேன் நந்தினி.”
“உங்ககிட்ட நான் ஒண்ணு கேட்கணும்.”
“கேளுங்க”
“நான் யாருன்னு தெரியாமலேயே என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
என்று நந்தினி தலை குனிந்தாள்.
“எனக்கு… உங்களை முதல்ல பார்த்தப்பவே பிடிச்சிடிச்சிருச்சி. ஆனா நான் அம்மாவோட வார்த்தையை மீறி இதுவரைக்கும் எதுவுமே பண்ணதில்லை, இது வாழ்க்கை அதனால அம்மாவுடைய மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு நான் அமைதியா இருந்தேன், அவங்க உங்களை கோவில்ல பார்த்துட்டு ரொம்ப பிடிச்சுப் போனதா என்கிட்ட வந்து சொன்னாங்க அதனாலதான் தைரியமா இன்னிக்கு வந்து என் மனசுல இருக்கிறதா உங்க கிட்ட சொன்னேன்” என்றான்.
“ஆனா உங்க அந்தஸ்து, உங்க தாரா… இதெல்லாம் நினைச்சா பயமா இருக்கு.”
“அந்தப் பயத்தை என்கிட்ட விட்ருங்க. நான் பார்த்துக்கிறேன்,” என்றான் மாயவன் உறுதியுடன். அவள் மெல்ல புன்னைகித்தாள்.