வீட்டிற்கு வந்ததும் கூட ராஜேஸ்வரிக்கு நந்தினியின் முகமே நினைவில் ஆடியது. மாயவன் அவுட்ஹவுஸில் இருந்து உள்ளே வந்தான்.
“என்னம்மா… கோவிலுக்கு போயிட்டு வந்துட்டிங்களா?”
“ஆமாம்..டா”
“சரி பொங்கல் எங்க?” என்று கேட்டுப்படி மாயவன் தன் அம்மாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
“டேய் நான் சாமியே சரியா கும்பிடலடா” என்று ஆரம்பித்து ராஜேஸ்வரி கோவிலில் நடந்ததை பற்றி சொல்லி முடித்தாள், மாயவனின் முகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“ஐயோ அம்மா இனிமே நீங்க தனியா கோவிலுக்கு போக வேண்டாம் நானும் வரேன்” என்றான். ராஜேஸ்வரி மகனுடைய கூந்தலை வருடிவிட்டு சிரித்தார்.
“மாயவா, இன்னிக்கு கோவில்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன்டா. என்ன ஒரு அடக்கம், என்ன ஒரு பண்பு! என்னை விழாமக் காப்பாத்தினது அந்தப் பொண்ணுதான்,” என்று நந்தினியைப் பற்றி விலாவாரியாக மீண்டும் சொன்னார்.
மாயவன் ஆர்வமாகக் கேட்டான். “அப்படியா? பேர் என்னம்மா?” என்றான்.
“நந்தினி..யாம்… ஒரு ஸ்கூல் டீச்சரா இருக்காளாம்.”
மாயவன் மனதில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. ‘நந்தினியா? நேத்து நான் பார்த்த அதே பெண்ணா?’ அவனது இதழ்கள் தானாகப் புன்னகைத்தன.
“என்னடா சிரிக்கிற? உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா?” ராஜேஸ்வரி ஆசையாகக் கேட்டார்.
“அம்மா… எனக்குன்னு ஒருத்தி வந்தா, அவ உங்க மனசுக்கு பிடிச்சவளா இருக்கணும்னு நினைச்சேன். நீங்க இவ்வளவு புகழ்றீங்கன்னா, அவ கண்டிப்பா நல்லவளா தான் இருப்பா,” என்றான் மாயவன். அதே சமயம், தாரா தனது வீட்டில் ஒரு பெரிய சதித் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தாள். எப்படியாவது மாயவனின் சொத்தை அடைய வேண்டும், “ஐயோ அதுக்கு அந்த பிச்சைக்காரி இடைஞ்சலா வந்துட்டா?” என்று அவளுடைய மனதிற்குள் நந்தினியின் முகம் தோன்றி மறைந்தது. நந்தினியை தன்வழியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தாள்.

தாரா போனில் ஒரு ரகசிய நபரைக் கூப்பிட்டாள். “ஹலோ… என்னை ஒரு பொண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கா, அந்த பொண்ணு வேலை செய்யுற ஸ்கூல் அட்ரஸ் கண்டுபிடிக்கணும். அவளைப் பத்தி ஏதாச்சும் ஒரு தப்பான நியூஸ்ச கிளப்பணும். உடனே வேலையை ஆரம்பி!” என்றாள்.
(தாராவின் மைண்ட் வாய்ஸ்: ‘மாயவன்னை அடையனம்ணு, இந்த நந்தினி யாருன்னு அவன் அம்மாவுக்குத் தெரியணும். அந்தப் பொண்ணோட கௌரவத்தை அழிச்சா, ராஜேஸ்வரி ஆண்டி அவளைத் திரும்பிப் பார்க்க மாட்டாங்க!’)
மறுநாள் காலை, நந்தினி வேலை செய்யும் பள்ளிக்கு மாயவன் சென்றான். அவன் கையில் ஒரு சிறிய பூங்கொத்து இருந்தது. நந்தினி குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து ரசித்தான்.
“நந்தினி!” மாயவன் மெதுவாக அழைத்தான். நந்தினி திடுக்கிட்டுத் திரும்பினாள். “நீங்களா? இங்க எதுக்கு வந்தீங்க?” என்று அதிர்ந்தாள்.
“உங்களைப் பார்க்கத்தான். நேத்து எங்க அம்மாவைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் நந்தினி. அவங்க உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டே இருக்காங்க.”
நந்தினி ஆச்சரியப்பட்டாள். “அந்த அம்மா உங்க அம்மாவா? அவங்க பெரிய கோடீஸ்வரி மாதிரி இருந்தாங்க… ஆனா நீங்க பாக்குறதுக்கு அப்படித் தெரியலையே?” என்றாள்.
“பணம் ஒரு காகிதம் நந்தினி. மனசுதான் முக்கியம். எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களை இன்னும் நல்லா தெரிஞ்சுக்கனம் அது..வந்து உங்களை?”
“என்ன சொல்றீங்க?”
“அது நான் உங்களை கல்யாணாம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்று மாயவன் நேரடியாகக் சொல்லிவிட்டான். நந்தினி மௌனமாக இருந்தாள். அவளது மௌனத்தில் சம்மதம் இருந்ததை மாயவன் உணர்ந்தான். ஆனால், தாராவின் கார் ஸ்கூல் கேட்டுக்கு வெளியே வந்து நின்றதும் அவர்கள் இருவரும் அதிர்ந்தனர்.
தொடரும்…