மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-2

மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-2

 Author: மகிழம் பூ  Category: தொடர்கதைகள்  Publisher: Magifm  Published: July 8, 2026 More Details
 Description:

 அத்தியாயம் – 2 

 

 

மாயவனின் வீடு ஒரு அரண்மனை போல இருந்தாலும், அவன் தங்குவது என்னவோ தோட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய அவுட்ஹவுஸில் தான். அவனது அம்மா ராஜேஸ்வரி, தன் மகனின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்பட்டாலும், அவனது நல்ல குணத்தைப் பார்த்துப் பெருமைப்படுவார். அன்று காலை, சென்னை நகரின் புகழ்பெற்ற அந்த அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. ராஜேஸ்வரி கையில் பூத்தட்டோடு பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, படிக்கட்டில் கால் தடுமாறி அவர் கீழே விழப்போக, “அம்மா! பார்த்து!” ஒரு மென்மையான கரம் அவரைத் தாங்கியது.

ராஜேஸ்வரி நிமிர்ந்து பார்த்தார். அங்கே நந்தினி நின்றிருந்தாள். அதே எளிமையான சுடிதார், அமைதியான முகம் ராஜேஸ்வரிக்கு நந்தினி பார்த்ததுமே பிடித்து விட்டது.

“ரொம்ப நன்றிம்மா… நல்ல வேளை நீ பிடிச்ச, இல்லன்னா இந்நேரம் என் கால்ல பலமான அடி பட்டிருக்கும்,” என்றார் ராஜேஸ்வரி மூச்சிறைக்க. நந்தினி புன்னகையுடன் அவரை அமர வைத்தாள். “பரவாயில்லைங்கம்மா. இங்க உட்காருங்க, தண்ணி குடிங்க. ஏன் இவ்வளவு கூட்டத்துல தனியா வந்தீங்க?”

“எப்பவும் நான் தனியா தான் கோவிலுக்கு வருவேன் இன்னிக்கு என்னமோ கூட்டம் அதிகம் இருந்ததுனால கொஞ்சம் கால் எடரிடுச்சு,” என்று நந்தினிக்கு விளக்கம் அளித்துவிட்டு ராஜேஸ்வரி தொடர்ந்து,”என் பையன் பேருக்கு அர்ச்சனை பண்ண வந்தேன். அவனுக்கு 30 வயசாகுது, ஆனா கல்யாணப் பேச்சு எடுத்தாலே ஓடிடுறான்,” என்று தன் கவலையைப் பகிரத் தொடங்கினார் ராஜேஸ்வரி. நந்தினி அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். “நிச்சயம் நடக்கும்மா. ஆண்டவன் உங்களுக்கு நல்ல மருமகளா கொடுப்பாரு” என்றாள்.

ராஜேஸ்வரிக்கு நந்தினியைப் பார்த்ததும் ஏனோ ஒரு நிம்மதி ஏற்பட்டது. “உன் பேர் என்னம்மா? நீ என்ன பண்ற?”

“என் பேர் நந்தினிம்மா.” 

“என்ன பண்ற?” 

“வைட் ரோஸ் மெட்ரிகுலேஷன்  ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்.”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே தாரா ஒரு நவீன ரக காரில் வந்து இறங்கினாள். ராஜேஸ்வரியைப் பார்த்ததும் ஓடி வந்தாள்.

“ஆண்டி! நீங்க இங்க என்ன பண்றீங்க? நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? வாங்க போலாம்!” தாரா அதிகாரமாக அழைத்தாள். ராஜேஸ்வரி நந்தினியைச் சுட்டிக்காட்டி, “தாரா, வந்ததும் ஏன் இப்படி பதட்டப்படுற கொஞ்சம் நிதானமா இரு.” 

“இல்ல ஆன்ட்டி ஷாப்பிங் போகணும் அப்புறம் உங்கள வீட்டில் ட்ராப் பண்ணிட்டு நான்  பியூட்டி பார்லர் போகணும்” 

 “அதெல்லாம் இருக்கட்டும் இவங்க நந்தினி இன்றைக்கு கோவிலில் கூட்டம் அதிகம் இருந்ததுனால என்னால ரொம்ப நேரம் நிக்க முடியல கால் மறுத்து போயிடுச்சு அதோடையே நடக்கும் பொழுது கால் தவறி கீழ விழ இருந்தேன், இந்த பொண்ணு தான் என்ன பத்தரமா தாங்கி பிடிச்சா” என்று ராஜேஸ்வரி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே தாரா, நந்தினியை எரிச்சலோடு பார்த்தாள்.

“ஓ… இவளா? நேத்து கூட மாயவன் இவளுக்காகத்தான் என்கிட்ட சண்டை போட்டான். ஆண்டி, இவங்க மாதிரி ஆளுங்ககிட்ட ரொம்ப ஒட்டாதீங்க, ஏதாச்சும்  பணம் பிடுங்க தான்   இப்படிப் இதவி பண்ணற மாதிரி நடிப்பாங்க” என்றாள்.

நந்தினியின் முகம் வாடியது. அவள், “அம்மா நீங்க பத்திரமா போயிட்டு வாங்க,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

(நந்தினியின் மைண்ட் வாய்ஸ்: ‘ஏன் அந்தப் பொண்ணு மட்டும் இப்படிப் பேசுது?  ‘)

ராஜேஸ்வரி, தாராவைப் பார்த்துக் கண்டித்தார். “தாரா! தப்பு… அந்தப் பொண்ணு ரொம்ப தங்கமான பொண்ணு மாதிரி தெரியுது. நீ ஏன் இவ்வளவு கடுமையா  பேசிருக்க கூடாது”

 “ஆண்டி,  இவங்கள மாதிரி ஆளுங்க பத்தி உங்களுக்கு தெரியாது, பணம் பறிப்பதற்காகவே நம்மள மாதிரி பணக்காரங்க கிட்ட ஒட்டி உறவாடுவாங்க, சரி விடுங்க. வாங்க நம்ம ஷாப்பிங் கிளம்பலாம்” என்று தாரா மிடுக்கோடு சொல்லிவிட்டு நடக்க, ராஜேஸ்வரிக்கு தாரா பேசுவது  எரிச்சலை தான் கொடுத்தது.

                                                                                                                                                       தொடரும்…

 Back
error: Content is protected !!