பள்ளியின் கேட்டிற்கு வெளியே நின்றிருந்த அந்தச் சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரிலிருந்து தாரா இறங்கிய விதம், ஒரு போர்க்களத்திற்குச் செல்லும் வீராங்கனை போல இருந்தது. அவள் கண்களில் கோபமும், உதட்டில் ஒரு வஞ்சகப் புன்னகையும் மின்னியது. மாயவனும் நந்தினியும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் ரத்தம் கொதித்தது. நேராக அவர்களை நோக்கி நடந்தாள்.
“வாட் எ சர்ப்ரைஸ்! மாயவா, நீ இங்க என்ன பண்ற? அதுவும் இந்தப் பொண்ணுகூட?” தாராவின் குரலில் ஏளனம் தெறித்தது. மாயவன் நிதானமாகத் திரும்பினான். “தாரா, நீ இங்க எப்படி?” என்றாள்.
“எனக்கு என்ன வேணுமா? உன்னைத் தேடிட்டு வந்தேன் மாயவா. ஆனா நீ என்னடான்னா… நேத்து ரோட்ல பார்த்த பொண்ணு, இன்னிக்கு கோவில்ல பார்த்த பொண்ணுன்னு இவ பின்னாடியே சுத்திட்டு இருக்க? நந்தினி… கரெக்டா?” என்று நந்தினியை நோக்கித் திரும்பினாள் தாரா. நந்தினி தயக்கத்துடன் தலை குனிந்து நின்றாள்.
“நல்லா ஸ்கெட்ச் போடுற..ம்மா நந்தினி! நேத்து மாயவன், இன்னிக்கு அவங்க அம்மா… அடுத்து என்ன?”
“பாருங்க நான் அவர தேடி போகலை அவர் தான் என்னை தேடி வந்திருக்காரு” என்று நந்தினி கோவமாக சொன்னாள்.
“அவரா வரலம்மா நீ ஏதோ மாயாஜாலம் பண்ணி வர வச்சிருக்க” என்ற தாராவின் வார்த்தைகள் நந்தினியின் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.
“தாரா! நிறுத்து!” மாயவன் கத்தினான். “நந்தினியைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது. மரியாதையா பேசு.” என்றான், தாரா ஏளனமாகச் சிரித்தாள். “எனக்கு எல்லாம் தெரியும் மாயவா. இவளைப் பத்தின ஒரு விஷயம் இப்போ சோசியல் மீடியாவுல வைரல் ஆகிட்டு இருக்கு, தெரியுமா உனக்கு?” என்று அவள் தன் போனிலிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினாள். அதில் நந்தினி ஒரு மர்ம நபருடன் நெருக்கமாக இருப்பது போல மார்பிங் செய்யப்பட்டிருந்தது. நந்தினி அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“இது… இது நானில்லை! இது பொய்!” நந்தினியின் கண்கள் கலங்கின.
(தாராவின் மைண்ட் வாய்ஸ்: ‘இப்பதான் ஆட்டம் ஆரம்பிச்சிருக்கு நந்தினி. மாயவன் முன்னாடியே உன்னை ஒரு கேரக்டர் இல்லாதவளா மாத்துறதுதான் என் பிளான். இனி மாயவன் உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டான்!’)
“பொய்யா? போட்டோ ஆதாரத்தோட இருக்கும்மா நந்தினி. மாயவா, இவளைப் போய் நீ?” தாரா வெற்றிக் களிப்போடு கேட்டாள். மாயவன் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தான். அவன் முகம் இறுகியது. நந்தினி அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினாள்.
தொடரும்..