மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-6

மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-6

More Details
 Description:

அத்தியாயம் – 6 

 

மாலையில் மாயவன் வீட்டிற்குச் சென்றபோது, அங்கே தாரா ஏற்கனவே வந்து ராஜேஸ்வரியிடம் நந்தினியைப் பற்றிய அந்தப் புகைப்படத்தைக் காட்டித் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆண்டி! பாத்தீங்களா? நீங்க தங்கமான பொண்ணுன்னு சொன்ன நந்தினியோட லட்சணத்தை? இவளைப் போய் மாயவன் இன்னிக்கு ஸ்கூல்ல பாத்திருக்கான்” என்று நடந்ததை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றி தாரா பேசிக் கொண்டிருந்தாள், அவளுடைய பேச்சு ராஜேஸ்வரிக்கு எரிச்சலை கொடுத்தாலும் அமைதியாக மகன் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று உட்கார்ந்திருந்தார். 

“என்ன ஆண்டி, இவ்வளவு தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க எங்கேயோ பார்த்துட்டு இருக்கீங்க போட்டோவ பாருங்க பக்கத்துல இருக்கிற அந்த பையனை பாருங்க ரெண்டு பேரும் எப்படியும் ஒரசி நின்னுட்டு இருக்காங்கன்னு பாருங்க போட்டோ மேல நம்பிக்கை இல்லடா வீடியோவை பாருங்க.” என்று தன்னுடைய மொபைலை தாரா, ராஜேஸ்வரியின் கையில் திணித்தாள். ராஜேஸ்வரி அந்தப் புகைப்படத்தைப் பார்த்து முகம் மாறிப் போய் அமர்ந்திருந்தார். மாயவன் உள்ளே வந்தான்.

“அம்மா! தாரா சொல்றதை நம்பாதீங்க. இதெல்லாம் ஒரு சதி,” என்றான் மாயவன்.

“என்னடா சதி? போட்டோ தெளிவா இருக்கு மாயவா. தாரா சொன்னது சரிதான் போல… நாம அந்தப் பொண்ணைப் பத்தித் தப்பா எடை போட்டுட்டோம் போலிருக்கு,” என்றார் ராஜேஸ்வரி வருத்தத்துடன்.

தாரா குறுக்கிட்டாள். “ஆமா ஆண்டி! மாயவன் இப்போ அந்தப் பொண்ணு மேல இருக்கிற பைத்தியத்துல இப்படித்தான் பேசுவான். நீங்கதான் ஒரு முடிவெடுக்கணும். அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருது, அன்னைக்கே எங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம்னு சொல்லிடுங்க” என்று  அதிரடியாக பேசினாள்.

ராஜேஸ்வரி, மாயவனைப் பார்த்தார். “மாயவா, என்ன சொல்ற?” 

“இவ சொல்றத நம்பாதீங்க” இன்று மாயவன் கத்தினான். 

“டேய் மாயவா அம்மா சொன்னா  அர்த்தம் இருக்கும்னு உனக்கு தெரியாதா?” என்று ராஜேஸ்வரி அழுத்தம் திருத்தமான குரலில் சொல்லவும் அவன் ஆமோதித்து தலையாட்டினான். ராஜேஸ்வரி மகனை கூர்ந்து பார்த்தாள்.   தாயும் மகனும் கண்ணோடு கண்ணோக்கி ஏதோ ரகசியமாக பேசிக் கொள்வது போல் தோன்றியது. ஆனால், தாரா தன்னுடைய மொபைலில் தீவிரம் காட்டியதால், அதை கவனிக்க தவறி விட்டாள்.

மாயவன் லேசாகச் சிரித்தான். “நிச்சயதார்த்தம் தானம்மா? தாராவோட பிறந்தநாளுக்கே வச்சுக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன்… அன்னைக்குத் தாரா சொன்ன எல்லா உண்மைக்கு ஆதாரம் ஸ்டாங்க வேணும், அதுக்கு அவ சம்மதிக்கணும்.” என்றான். தாரா உற்சாகமானாள்.

” இப்ப கொடுத்ததே ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் தான் இது பத்தலனா நீ கேட்ட மாதிரி ஸ்ட்ராங்கான எவிடென்ச ரெண்டு நாள்ல கொண்டு வரேன்” என்றாள்.  

(தாராவின் மைண்ட் வாய்ஸ்: ‘யெஸ்! கடைசியா மாயவன் வழிக்கி வந்துட்டான். அந்த நந்தினியை இனி யாராலயும் காப்பாத்த முடியாது. அந்த நிச்சயதார்த்த மேடையில அவளை இன்னும் கேவலப்படுத்துவேன்!’)

அதேநேரம் மாயவன் தன் போனில் ஏதோ ஒரு ரகசியத் தகவலை டைப் செய்தான். ஆட்டம் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

தொடரும்… 

 Back
error: Content is protected !!